Join Our Service

Edit Template

ஜான் கால்வின் - The Prince of Expositors

ஜான் கால்வின் – 1509 – 1564

கால்வினின் ஆரம்ப காலம்:

ஜான் கால்வின் 1509 ஜுலை 10 – பிரான்ஸ் நாட்டில் நோயன் என்ற ஊரில் பிறந்தார்.  அவர் தன்னோடு 2 சகோதர்களோடு கூட பிறந்தவர். கால்வின் ரோமன் கத்தோலிக்க குடும்ப பின்னணியை சேர்ந்தவர். கால்வினின் தந்தை ரோம பிஷப்பிற்கு கீழே உதவியாளாராக பணியாற்றினார். லூத்தர் 95 குற்ற பத்திரிக்கை அறையும் போது கால்வின் 8 வயதுள்ள சிறுவனாக இருந்தார்.தந்தையின் வழிகாட்டுதலின்படி 14 வயதில் பாரிஸில் பல்கலைகழகம் சென்று  இலக்கியம், தத்துவவியல் பாடங்களில் முதுகலை பட்டம் பயின்றார். 1525-1530  வரை தகப்பனாரின் விருப்பபடி பொதுச்சட்டம் (doctrate of Law) பயின்றார். இங்கு தான் கால்வின் மார்ட்டின் லூத்தரின் எழுத்துக்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டார். அகஸ்டினின் எழுத்துக்களையும், ஆதி திருச்சபை பிதாக்களின் புத்தகங்களை ஆர்வத்தோடு படித்தார்.  இந்த கால கட்டத்தில் தான் இரட்சிக்க பட்டதாக கால்வின் கூறுகிறார். இதே காலத்தில் தான் protestand சத்தியத்தை பின்பற்றியவர்கள் அதிகமாக பல்வறு நிலைகளில் உபத்திரவபடுத்தபட்டு தீயில் சுட்டெரிக்கபட்டார்கள். குறிப்பாக பிரான்சில் மிக கொடூரமாக கிறிஸ்தவர்கள் கொல்லபட்டார்கள்.  அவர்களின் சார்பாக கால்வின், பிரான்ஸ் மன்னனுக்கு சமர்ப்பிக்கும்படி கிறிஸ்தவ விசுவாச சட்ட புத்தகத்தை எழுதினார். அது தான் தனது 25 வயதில் கால்வின் எழுதிய the institutes of the christian religion book என்கிற புத்தகம். இப்புத்தகம் அதிகமாக அச்சடிக்கப்பட்டு அநேகரை சென்றடைந்தது.இன்றளவும் உலக வரலாற்றை புரட்டிபோட்ட பத்து புத்தகங்களில் இதுவும் ஒன்றாக கருதபடுகிறது.  அதினிமித்தம் பாரிஸில் கால்வினுக்கும் அவரது எழுத்துகளுக்கும் பல்வேறு தடைகளை ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கொண்டு வந்தார்கள். கால்வினுக்கு நெருங்கிய நண்பர்கள் அவரை பாதுகாக்கும்படி பல்வேறு இடங்களில் அவரை மறைத்து வைத்து இறுதியாக அவரை பிரான்சிக்கே அனுப்ப சித்தமாயிருந்தனர்.

1. கால்வின் வாழ்வில் – வேத அதிகாரம்

ஜான் கால்வினும் சுய பாதுகாப்பை நாடி தனிப்பட்ட முறையில் படித்து ஒய்வு எடுக்க விரும்பி, பிரான்ஸ் செல்ல பிரியப்பட்டார், அவர் பிரான்சிற்கு ஜெனிவா வழியாக மட்டுமே செல்ல முடியும், ஒருநாள் இரவு ஜெனிவாவில் தங்கிவிட்டு காலை பிரான்ஸ் செல்ல சித்தமாய் இருந்தார். அப்பொழுது 1536 ல் ஜெனிவாவில் சீர்திருத்த சத்தியத்தை போதித்து, திருச்சபையை வழிநடத்தி கொண்டிருந்த வில்லியம் பரேல் என்பவர் கால்வின் அங்கு இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்கிறார். வில்லியம் பரேல் கால்வினை தன்னோடு ஜெனிவாவில் போதகராக இருந்து போதிக்கவும், திருச்சபையை வழிநடத்தவும் அவரை அழைக்கிறார். பரேலின் அழைப்பை முற்றிலும் நிராகரித்தார் கால்வின். இருவருக்கும் ஏற்பட்ட காரசார விவாதத்திற்கு பின்பு வில்லியம் பரேல் கால்வினிடம்  இறுதியாக சொன்னது “இன்றைக்கு தேவன் உன்னை அழைக்கும் இந்த பொறுப்பை நீ தட்டி கழித்தால் தேவனுடைய உக்கிரக கோபமும், சாபமும் உன்மேல வரும் என்றார்.”  அதை பரலோக தேவனுடைய சத்தமாக கால்வின் உணர்ந்து இறுதியாக ஜெனிவாவில் வில்லியம் பரேலோடு சேர்ந்து செயல்பட  கால்வின் சம்திக்கிறார்.

ஜெனிவாவில் கால்வினின் திருச்சபை சீர்திருத்தம் – 1536- ல் பிரசங்கியாக, ஆசீரியராக கால்வின் ஜெனிவாவில் உள்ள திருச்சபையில் ஏற்படுத்தபட்டார், அங்கு வேதத்தை முன்னிலைபடுத்தி பிரசங்கமே மையம், திருச்சபை ஒழுங்கு நடவடிக்கை, தொடர்ச்சியான திருவிருந்து, சபையாக பாடுதல் ஆகியவற்றை நடைமுறைபடுத்தினார். கால்வினின் வேதபூர்வமான வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் அங்குள்ள திருச்சபைகள் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் கால்வினுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்தனர்.  வெகு சீக்கிரமாக கால்வினும், பரேலும் 2 வருடத்தில் அந்த திருச்சபையிலிருந்து துரத்தபட்டார்கள். ரோமகத்தோலிக்க அதிகாரத்திற்கு கீழ் இருந்த ராஜா ஜெனிவாவையும் அங்குள்ள திருச்சபைகளையும் கைப்பற்ற நினைக்கும்போது அங்குள்ள திருச்சபை மக்கள் கால்வினை மறுபடியுமாக அழைத்தார்கள். கால்வின் மறுபடியும் ஜெனிவாவில் வந்து தனது மரணம் வரை அங்கு ஊழியம் செய்தார் அங்கு கால்வின் பிரசங்கங்கள் வேத அதிகாரம் நிறைந்த வார்த்தைகளாக இருந்தது.. (no topical sermon, only book by book verse by verse) தொடர்ந்து பிரசங்கம் செய்தார். (there is no illustration apart from the scripture) தனது பிரசங்கத்தில் எந்தவொரு கதையையும், தனிமனித வாழ்க்கையையும் ஒருபோதும் கால்வின் பயன்படுத்தியதில்லை. வேதத்திற்கு வெளியே எந்தவொரு உதாரணத்தையும் பயன்படுத்தியதில்லை.( there is no manuscript) – பிரசங்க குறிப்பு எழுதி வைத்து ஒருபோதும் அவர் பேசியதில்லை. பிரசங்க பீடத்தில் (Hebrew, Greek bible) மூல மொழி வேதாகமம் மட்டுமே இருக்கும். பிரசங்க ஆயத்தத்தின்போது வெளிபடுத்தாத எந்தவொரு சத்தியத்தையும் வார்த்தையையும் பிரசங்க பீடத்தில் நின்று ஒருபோதும் பேசாதாவர். ஒருமையில் பேசாதவர், நாம், நாமெல்லாரும் என்ற வார்த்தையை அதிகமாய் பயன்படுத்துவார்.1541 லிருந்து 1564 க்குள் -4000 வேத வியாக்கியான பிரசங்கம் செய்திருக்கிறார்.  the king of exegesis- வேத வியாக்கியான மன்னன் என்றும், the Prince of Expositors வியாக்கியான பிரசங்கிகளின் இளவரசர்.” புகழப்பட்டார். கால்வின் காலத்தில் எழுத்து மிகப்பெரிய ஆயுதமாக சீர்திருத்தம் பரவ உதவியது. அச்சு இயந்திரம் வருகை மிக முக்கியமான பங்கு வகித்தது. அதற்கு விதை போட்டவர்கள்- ஜான் விக்ளிப், ஜான் ஹஸ், ஸ்விங்ளி. வேதாகமத்தை குறித்த மிக உயர்வான, உன்னதமான தனது எண்ணத்தை கொண்டு, அதின் அதிகாரத்தையும், வல்லமையையும் விசுவாசித்து, கால்வின் அதை தனது எழுத்துகளில் வெளிபடுத்தினார். முறைபடுத்தபட்ட வேதாகம விளக்கவுரைக்கு அஸ்திபாரம் போட்டார் கால்வின். வேத வியாக்கியான முறையை கிரமமாக பயன்படுத்தினார். இலக்கண, இலக்கிய, வரலாறு பின்னனியயை தெளிவுபடுத்தினார். அதிகமான வேதாகம விளக்கவுரைகளை எழுதி முடித்தார், விசுவாச அறிக்கை மற்றும் ஒருசில மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்து எழுதினார், Geneva study Bible, Catechism, ஆகியவற்றை தனி ஒருவராக செய்து முடித்தார். தேவனை மையமாக வைத்து, அவருடைய வார்த்தை மட்டுமே நம்மை ஆளுகை செய்ய வேண்டும் என்று உறுதியாக பறை சாற்றினார். லூத்தர் – வேதம் தடை செய்யாத காரியங்களை செய்யலாம் என்றார். கால்வின்- இல்லை வேதம் சொல்லியதை மட்டுமே செய்ய வேண்டும் என்றார். சபை வேதத்திற்கு அல்ல, வேதமே சபையின் மேல் அதிகாரமுடையது என்றார். ஒருபுறம் தொடர்ச்சியான பிரசங்கம், மறுபுறம் தொடர்ச்சியான எழுத்து (writtings) என்று நிறுத்தாமல் உழைத்து கொண்டிருந்தார். சீர்திருத்த சத்தியத்திற்காக எழுத்து என்கிற பட்டயத்தை மிக வல்லமையாக கூர்மையாக பயன்படுத்திய மனிதன் ஜான்கால்வின். வேதத்தோடு தன்னை முற்றிலும் அர்பணித்தவராக வாழ்ந்தார். அவர் வேதத்தோடு மூழ்கி இருந்தார். கால்வினின் வாழ்கையை நாம் பார்க்கும்போது அவர் நம்மை வேதத்திற்கு கடத்தி செல்கிறதை நாம் உணரலாம். வேதத்தையும், கால்வினையும் எங்கும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறதை நாம் பார்க்காலாம். எப்படி கால்வினால் இப்படி வாழ முடிந்தது? பு.ஏ. ல் இயேசுகிறிஸ்துவின் வாழ்வும் இப்படிதான். இல்லை இதைவிட உன்னதமானது.   நமது வாழ்க்கை அப்படி இருக்கிறதா? வேதத்துடனான நமது உறவும், செயல்பாடும் இப்படி இருக்கின்றதா? எப்படி நாம் நமது நேரத்தையும் காலத்தையும் செலவு செய்கிறோம்?

2. கால்வின் வாழ்வில்  – கிறிஸ்துவின் மகிமை

கால்வினுடைய ஊழியமும் எழுத்துக்களும் வேதத்தை மையமாக, முதன்மையாக கொண்டிருந்தது என்று நாம் பார்க்கும்போது எதை அவர் வேதத்திலிருந்து முதன்மைபடுத்தினார், மேன்மைபடுத்தினார்?  கிறிஸ்துவும் அவருடைய மகிமையும் மட்டுமே முதன்மையான நோக்கமாக கால்வின் தனது வாழ்க்கையிலும் செயல்களிலும் வெளிபடுத்தினார். கால்வின் எழுத்துக்கள், மற்றும் பிரசங்கங்களை உற்று கவனிக்கும்போது கிறிஸ்துவின் மீதான அவரது பக்தியும், கிறிஸ்துவின் மகிமை மீதான அவரின் தீராத தாகத்தையும் நாம் பார்க்காலம். (union with Christ) கிறிஸ்துவோடு விசுவாசிக்கு உள்ள ஐக்கியத்தின் அவசியத்தை ஆழமாய் வெளிபடுத்தினார்.-  ஐக்கியத்தின் தேவை, அதின் பலன்கள், இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக கிறிஸ்துவோடு உள்ள நெருக்கம் போன்றவற்றின் மேன்மைகளை தொடர்ச்சியாக போதித்தார். கால்வின் தான் எழுதியதையும், பிரசங்கித்ததையும் நடைமுறைபடுத்தி வாழ்ந்தார். ரோமன்கத்தோலிக்க மதத்தில் உள்ள எல்லா கள்ளபோதனைகளும் செயல்களும் கிறிஸ்துவினுடைய மகிமையை குலைத்து போடுகிறது என்பதினால், கிறிஸ்துவினுடைய மகிமை சிறுஅளவும் கூட கலங்கப்படுவதை, கனவீனபடுத்தப்படுவதை தொடர்ச்சியாக கடுமையாக எதிர்த்தார் கால்வின்.  

கால்வினின் கிறிஸ்தவ தேவபக்தி – கிறிஸ்துவின் மீதான தனது பக்தி என்பது இயேசுகிறிஸ்து எனது மிகுந்த கனத்திற்குரிய தகப்பன் என்றும் மற்றும் பயபக்திகுரிய ஆண்டவர் என்றும் வெளிப்படுத்தி வாழ்வதாகும் என்றார்.  கிறிஸ்துவினிடத்தில் இப்படி மெய்யான தேவபக்தி கொண்ட மனிதனால் மட்டுமே சத்தியத்தின் அடிப்படையில் மெய்யான தேவ அன்பிலும், சக மனித அன்பிலும் உண்மையாக செயல்பட முடியும். எப்படி இந்த கிறிஸ்துவின் அன்பு என்னில் செயல்பட முடியும்?. அவருக்கு கீழ்படிவதின் மூலமாக மட்டுமே. என்னுடைய கீழ்படிதலின் அளவைப் பொறுத்தே என்னுடைய தேவ அன்பு இருக்கும். பாவத்திற்கு எதிரான எனது வாழ்வு, அவரை ஆராதிப்பதற்கான எனது ஈடுபாடு, அவரின் மக்கள் மீதான எனது அன்பு ஆகிய இந்த அடிப்படையான மூன்றுமே கிறிஸ்துவின் மகிமையை முன்னிறுத்துவதிலும், அவரின் மகிமைக்கு எந்த சிறு கலங்கமும் கொண்டுவருகிற எதையும் எதிர்ப்பதற்கும், அழிப்பதற்கும் என்னை பெலப்படுதுகிறது என்கிறார். இந்த கிறிஸ்துவின் மகிமை மீதான கால்வினின் பக்தியும் அன்பும் அவரின் வாழ்வினுடைய எல்லா பகுதிகளிலும் வெளிப்பட்டது. கால்வினின் வாழ்கை திருச்சபைக்குள்ளாக மாத்திரமல்ல முழு ஜெனிவாவிலும் கிறிஸ்துவின் மகிமையை மேன்மைபடுத்தியது. 

கால்வினின் வாழ்வு ஜெனிவாவில் ஏற்படுத்திய சில முக்கிய மாற்றங்கள்.

1.வேலையில் சீர்திருத்தம்- எல்லா வேலைகளும் தேவனுக்காகவே செய்யபடுகின்றது. தேவனுக்கு சேவை செய்யவே மனிதன் அழைக்கபடுகிறான்.

2.கல்வியில் சீர்திருத்தம்- மத குருமார்களும், செல்வதர்களுக்கும் மட்டுமே உரித்தான கல்வி எல்லாவித மக்களுக்கும் என்று அறிவித்து, ஏழைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்கினார். வேதத்தை அடிப்படையாக கொண்டிராத எந்தவொரு கல்வியும் கறைபடிந்த ஆபத்தான ஒன்று என்று முழங்கினார்.

3.சட்டம்-ஒழுங்கில் சீர்திருத்தம் – பரிசுத்த தேவனின் 1௦ கட்டளைகளே சமுதாயத்தை ஆளுகை செய்ய வேண்டும்.

4.1559ல் ஜெனிவா பல்கலைகழகத்தை கால்வின் உருவாக்கினார். அதின் விளைவாக ஜெனிவாவிலிருந்து அநேக ஊழியக்காரகர்கள் உலகமெங்கும் அனுப்பபட்டார்கள். அனுப்பப்பட்ட இவர்கள் பரிசுத்தவான்களின் காலத்தை (puritians era) தங்கள் தேசங்களில் உருவாக்கினார்கள்.

5. பரிசுத்தவான்களின் காலத்திற்கு அடிப்படை போட்டவர் ஜான் கால்வின். இப்படி முழு வேதத்தோடு சரியான உறவு வைத்திருப்பவன் கிறிஸ்துவை நேசிக்கிறவனாக அவரை தனது வாழ்வின் எல்லா இடங்களிலும் மகிமைபடுத்துகிறவனாக அவரை இந்த உலகத்தில் பிரதிபலிக்கிறவனாக வாழ்வான். கிறிஸ்துவினுடைய குணாதிசயம் அவனில் காணப்படும். அதின் மூலம் கிறிஸ்து அதிகமாய் மகிமைப்படுவார். உன் வாழ்க்கையில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா? கிறிஸ்துவின் மீதான உனது அன்பு எப்படிப்பட்டது?

3. கால்வினின் வாழ்வில் சுய இழப்பும், தியாகமும்:

கால்வின் தனது வாழ்வு முழுவதும் பணமின்றி வறுமையில் வாழ்ந்தார். அநேக வருடங்கள் ஒரு வேளை மட்டும்தான் உணவு உட்கொண்டார். உணவுக்கு நடுவில் எதையும் அவர் சாப்பிடுவதில்லை.  மிக பலவீனமான மனிதர். 1540- தனது31 வயதில் சீர்திருத்த சத்தியத்திற்காக தனது கணவனை சுட்டெரிக்க குடுத்த ஒரு விதவையை (Idelette de Bureதிருமணம் செய்தார் கால்வின். அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்தார்கள். கால்வினுக்கு பிறந்த குழந்தையும் பிறந்த சில நாட்களில் இறந்தது. அவருடைய மனைவியும் அதிக சரீர பலவீனங்களினால் சீக்கிரமாக மரணம் அடைந்தார்.

9 வருடதில் அவருடைய திருமண வாழ்க்கை முடிந்தது. 26 வயதில் ஆஸ்துமா, கொடிய தலைவலி, அல்சர், இரத்த வாந்தி, தூக்கமின்மை, தொடர்ச்சியான காய்ச்சல், மத்தியில் பணி செய்துள்ளார். அவருடைய இறுதி நாட்களிலும் படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் 3 வேத புத்தகங்களுக்கு விளக்கவுரையை எழுதி முடித்துள்ளார்.  20 மனிதர்கள் சேர்ந்து செய்யகூடிய வேலையை ஒரு மனிதனாக கால்வின் செய்தார். 27 – 5- 1564 ல் கர்த்தருடைய சமுகத்தில் நித்திய இளைப்பாறுதலை ஜான் கால்வின் அடைந்தார். வாழும்போது அதிக எதிரிகளை சம்பாதித்த மனிதன், மரித்தபின்பு அதிக சீஷர்களை சம்பாதித்த மனிதன். தன்னை குறித்து அதிகம் பேச விரும்பாதவர் கால்வின். தனது கல்லறையை கூட யாரும் அறியக்கூடாதபடி செய்துவிட்டு போனார்.

நாம் எப்படி வாழ்கிறோம்? கிறிஸ்துவிற்காக எதை இழந்திருகிறோம் நாம்? எப்படிப்பட்ட தியாகத்தை அவரின் ராஜ்ஜிய பணிக்காக செய்திருக்கிறோம்? கால்வினைபோல இப்படிப்பட்ட வேதம் நிறைந்த சிந்தனைகளும், கிறிஸ்துவின் மகிமைக்கான வாழ்வும், அர்பணிப்புள்ள சுய இழப்பும் இல்லாமல் ஒருபோதும் சீர்திருத்தம்  வந்துவிடாது நம் தேசத்தில்.

Previous Post
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Join Our Community
Subscribe Today

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Out believe has request not how comfort evident. Up delight cousins we feeling minutes genius.

Get Involved

Matthew gospel

பிரசங்கி புத்தகம்

யோவான் சுவிசேஷம்

1689 விசுவாச அறிக்கை

Service Times

Sunday Worship:

6 PM - 7 PM

Midweek Service:

Friday 8 PM - 8.30 PM

Weekly Service:

Sunday 10 AM - 11.30 PM

Contact Info

Copyright © All Rights Reserved by Reformed Baptist Church in Dindigul
Call Now Button